- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தேர்தல் அலுவலர்
- சத்ய பிரதா சகு
- சென்னை
- சத்யபிரதா சச்சு
- மக்களவைத் தேர்தல்
- சத்யா பிரதா சகு
சென்னை : தமிழ்நாட்டில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நாளை மறுநாள் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சத்ய பிரதா சாகு, “நாட்டில் தமிழ்நாட்டில் மட்டுமே மிக அமைதியாக தேர்தல் நடக்கிறது. மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் நாளை (ஏப்.18) வரை தபால் வாக்கு செலுத்தலாம். பயிற்சி மையங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகங்களுக்கு சென்று தபால் வாக்குகளை பதிவு செய்யலாம்.மக்களின் ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்திற்கு மிகவும் முக்கியம்.
மக்கள் 100% வாக்களிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சிறை கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று நாளை மாலை 6 மணி வரை தபால் வாக்கு அளிக்கலாம். தமிழகத்தில் 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமரா முறையில் கண்காணிக்கப்பட உள்ளது. சிறையில் உள்ளவர்கள் வெப் கேமரா பொருத்தும் பணி இன்று மாலையுடன் நிறைவுப்பெற்று சோதனை ஓட்டம் நடைபெறும். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 65 சதவீத வாக்குச்சாவடிகள் என்ற அளவில் வெப் கேமரா பொருத்தப்படுகிறது. வாக்காளர் அடையாள அட்டை எண் மூலம் வாக்குச் சாவடி விவரங்களை அறியலாம். வாக்குச்சாவடி விவரங்களை அறிய இணையதளத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. electoralsearch.eci.gov.in என்ற இணையதளம் மூலம் வாக்குச்சாவடி விவரங்களை அறியலாம்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post தமிழகத்தில் 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமரா முறையில் கண்காணிக்கப்பட உள்ளது :தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் appeared first on Dinakaran.