×

தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரியங்கா காந்தி வருகிற 20ம் தேதி கேரளாவுக்கு வருகை: ராகுலுடன் இணைந்து சுற்றுப்பயணம்..!!

கேரளா: தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரியங்கா காந்தி வருகிற 20ம் தேதி கேரளாவுக்கு வருகை தர உள்ளார். கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற 26-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 20 தொகுதிகளிலும் மொத்தம் 194 பேர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ், பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.

பிரசாரம் நிறைவடைய இன்னும் 8 நாட்களே இருப்பதால், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி அங்கு அவர் தொடர்ந்து 2 நாட்கள் ரோடு ஷோ உள்பட சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு அசத்தினார். மற்ற தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அடுத்தடுத்த நாட்களில் ஆதரவு திரட்டுகிறார்.

இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக பிரியங்கா காந்தி வருகிற 20-ந்தேதி கேரளா வருகிறார். கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் போட்டியிடும் 20 தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரியங்கா காந்தி தீவிர பிரச்சாரம் செய்ய உள்ளார். பிரியங்கா காந்தி பிரசாரம் செய்யும் போது, ராகுல் காந்தியும் அவருடன் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ராகுல் காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பிரியங்கா காந்தியும் கேரளா வர உள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

The post தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரியங்கா காந்தி வருகிற 20ம் தேதி கேரளாவுக்கு வருகை: ராகுலுடன் இணைந்து சுற்றுப்பயணம்..!! appeared first on Dinakaran.

Tags : Priyanka Gandhi ,Kerala ,election campaign ,Rahul ,
× RELATED கடந்த 7 ஆண்டுகளில் பலமடங்கு உயர்ந்த...