×

மத்திய சென்னை திமுகவின் கோட்டை: திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பேட்டி

சென்னை: மத்திய சென்னை திமுகவின் கோட்டை என தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை மறுநாள் மக்களவை தேர்தல் நடக்க உள்ளதையடுத்து அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் முக்கிய அரசியல் பிரமுகர்களின் பரப்புரையில் அனல் பறக்கிறது. அந்த வகையில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் வாக்கு சேகரித்தார்.

வீடு வீடாக சென்று தயாநிதி மாறன் தீவிர வாக்கு சேகரித்த தயாநிதி மாறனுக்கு வழிநெடுகிலும் முகமலர்ச்சியோடு கையசைத்து பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். வீதி, வீதியாகச் செல்லும் தயாநிதிக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தயாநிதி மாறன்; மத்திய சென்னை திமுகவின் கோட்டை. இதேபோல தான் தமிழகமெங்கும் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சிக்கு வெற்றி உறுதியாகியுள்ளது.

இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். இந்தியாவை காப்பாற்றுவதற்கான தேர்தல்,. அதனால் மக்கள் அனைவரும் தவறாமல் வரும் வெள்ளிக்கிழமை உங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். உங்கள் ஒவ்வொரு வாக்கும் இந்தியாவின் தலையெழுத்தை மாற்றும் என்று கூறினார்.

The post மத்திய சென்னை திமுகவின் கோட்டை: திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Madhya Chennai Timukhin Fort ,Dimuka ,Dayaniti Maran ,Chennai ,Central Chennai ,Dimukhin ,Tamil Nadu ,Madhya Chennai ,Dimukhin Fort ,
× RELATED சுதந்திரத்துக்குப் பிறகு அமைந்த மிக...