×

தமிழ்பல்கலை கழகத்தில் நாட்டுப்புறவியல் துறை சார்பில் இலாவணி சிறப்பு நிகழ்ச்சி

தஞ்சாவூர், ஏப்.17: தஞ்சாவூர் தமிழ்பல்கலைக் கழகத்தின் நாட்டுப்புறவியல்துறை சார்பில் நலிவுற்ற கலைகள் ஆவணப்படுத்துதல் என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறை சார்பில் ‘நலிவுற்றக் கலைகள் ஆவணப்படுத்துதல்: இலாவணி’ சிறப்பு நிகழ்வு மொழிப்புல அவையத்தில் நடைபெற்றது. நிகழ்வில் தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். நாட்டுப்புறவியல் துறை தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் காமராசு நோக்கவுரையாற்றினார்.

நாட்டுப்புறவியல் துறை உதவிப் பேராசிரியர் இளையராஜா வரவேற்றார். மொழிப்புலத் தலைவர் முனைவர் கவிதா வாழ்த்தி பேசினார். சிறப்பு நிகழ்வாக எழுத்தாளர் தஞ்சை சாம்பான் குழுவினர் இலாவணி எனும் எரிந்தகட்சி, எரியாதகட்சி எனும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஆய்வாளர்கள் தங்கள் கருத்துரையை வழங்கினர். நாட்டுப்புறவியல் துறை உதவிப் பேராசிரியர் மாலதி நன்றி கூறினார்.

இந்நிகழ்வை நாட்டுப்புறவியல் துறையின் முனைவர் பட்ட ஆய்வாளர் நந்தினி தேவி தொகுத்து வழங்கினார். இதில் நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

The post தமிழ்பல்கலை கழகத்தில் நாட்டுப்புறவியல் துறை சார்பில் இலாவணி சிறப்பு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Ilavani ,Department of Folklore ,Tamil University ,Thanjavur ,Thanjavur Tamil University ,Department of Folklore, Tamil University ,Documentation of Decayed Arts: Ilavani ,Linguistics Hall ,
× RELATED சித்த மருத்துவ சான்றிதழ் படிப்பை...