- திருச்சிற்றப்பலம் விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம்
- பேராவூரணி
- வேளாண் கல்லூரி
- பேராவூரணி ஒன்றியம் திருச்சிற்றம்பலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்
- புஷ்கரம்
- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
- பேராவூரணி தென்னை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம்
- திருச்சிற்றம்பலம்…
- திருச்சிற்றம்பலம் விவசாயிகள் உழவர் நிறுவனம்
பேராவூரணி, ஏப். 17: பேராவூரணி ஒன்றியம் திருச்சிற்றம்பலம் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தில் வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் வேளாண் பணி அனுபவத்திட்டத்தில் பயிற்சி பெற்றனர். திருச்சிற்றம்பலத்தில் உள்ள பேராவூரணி தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் இணைந்த புஷ்கரம் வேளாண் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவர்கள் அந்த நிறுவனத்தின் செயல் இயக்குனர் துரைசெல்வத்திடம் கலந்துரையாடி பயிற்சி பெற்றனர்.
1,100 தென்னை விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்ட உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தில் விவசாயிகளிடம் கொப்பரை தேங்காய் தேர்வு, எண்ணெய் பிரித்து எடுத்தல் மற்றும் மதிப்பு கூட்டல் உள்ளிட்டவை குறிந்து மாணவர்கள் அறிந்து கொண்டனர். பயிற்சி பெற்றதற்கான சான்றிதழை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல் இயக்குனர் துரைசெல்வம் மாணவர்களுக்கு வழங்கினார்.
பயிற்சியில் மாணவர்கள் முத்து ஈஸ்வரன், ஹர்சத், கௌஷிக், கலை தேவா, கலையரசன், கார்த்திக், கார்த்திகேயன், கிருபாகரன், மதன், மனோஜ், மனோஜ் குமார், முகிலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post திருச்சிற்றம்பலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் வேளாண் கல்லூரி மாணவர்கள் பயிற்சி appeared first on Dinakaran.