- முனைவர் பட்டப்படிப்புக்கு முந்தைய
- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
- தஞ்சாவூர்
- போஸ்ட்
- பட்டதாரி மாணவர்
- கடல்சார் வரலாறு துறை, கடல் தொல்லியல்
- தமிழ் பல்கலைக்கழகம்
- துணை வேந்தர்
- டாக்டர்
- திருவள்ளுவன்
- முனைவர் பட்டப்படிப்புக்கு பின் மாணவர்
தஞ்சாவூர், ஏப். 17: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர்ப் பட்ட, முதுநிலை மாணவர் கருத்தரங்கம் கடல்சார் வரலாறு, கடல்சார் தொல்லியல் துறையின் சார்பில் நடைபெற்றது.
தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் திருவள்ளுவன் தொடங்கிவைத்து உரையாற்றினார்.
மாணவர்கள் ஆய்வுத் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதன் அடிப்படையில் அயல் நாட்டுப் பல்கலைக்கழகங்களில் நடைபெறுவது போல இக்கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனக்கூறினார். தமிழ்ப் பல்கலைக்கழக முதுகலைத் தொல்லியல் மாணவர்களும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொல்லியல் மாணவர்களும் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு புதிய தொல்லியல் கண்டுபிடிப்புகள், இனவரைவியல் ஆய்வுகள் அடிப்படையிலான தங்களது கட்டுரைகளை வாசித்தனர்.
குந்தவை நாச்சியார் கல்லூரியில் பணிப்பயிற்சி பெறும் மாணவர்களும் கலந்து கொண்டனர். மாணவர்களை ஆய்வாளர்களாக உருவாக்குவதற்காக இக்கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் துணைவேந்தர் தெரிவித்தார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவி ஆஸ்லின் காருண்யா கண்டுபிடித்த திரு நெல்வேலி தருவை அருகே கண்டுபிடித்த 1760ம் ஆண்டைச் சேர்ந்த அணைக்கட்டுக் கல்வெட்டு ”அசாது மம்மது இசபு கான் பாதா சாயபு” என்ற பெயரைக் குறிப்பிடுகிறது. இது மருதநாயகம் எனப்படும் யூசுப் கானை குறிக்கலாம் எனக் கருதப்படுகிறது. கருத்தரங்கின் தொடக்கவிழாவில் தமிழ்ப் பலகலைக்கழகத்தின் பதிவாளர் பேராசிரியர் தியாகராசன், துறைத் தலைவர் முனைவர் செல்வகுமார், வருகைதரு பேராசிரியர் சங்கரன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறை உதவிப்பேராசிரியர் கோ.மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட முதுநிலை மாணவர் கருத்தரங்கம் appeared first on Dinakaran.