- பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி
- மையம்
- பெரம்பலூர்
- பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலகம்
- குலில்தலி
- முசிறி சட்டமன்றத் தொகுதிகள்
- தின மலர்
பெரம்பலூர்,ஏப்.17:பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குளித் தலை மற்றும் முசிறி சட்ட மன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத் தப்படவுள்ள பொருட்கள் முறையாக பிரித்து அனுப் பிவைப்பதற்கான முன் னேற்பாட்டுப் பணிகள் குறித்து பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவல ரான மாவட்டக் கலெக்டர் கற்பகம் நேற்று (16ம் தேதி) குளித்தலை மற்றும் முசிறி வருவாய் கோட்டாட் சியர் அலுவலகங்களில் பார்வையிட்டு ஆய்வுசெய் தார்.
வாக்குப் பதிவிற் குத்தேவையான அனைத்து முன்னேற்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாக்குப் பதிவு நாளான 19ஆம்தேதி அன்று வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்த ப்பட உள்ள வாக்காளர் பட் டியல், எழுது பொருட்களு க்கான பேனா, பென்சில், அழிப்பான், வெள்ளைத் தாள், மெழுகுவர்த்தி, நூல், காதி நூல், துணி நூல் பை, கார்பன் சீட் போன்ற பல் வேறு பொருட்கள் அடங் கிய பைகள் உள்ளிட்ட பொருட்களை வாக்குச்சா வடிகள் வாரியாக பிரித்து வைக்கும் பணிகளை பார் வையிட்ட பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும்அலுவலர், பொருட்களை உரிய பாது காப்புடன் பராமரிக்கவேண் டும்எனவும்,வாக்குச்சாவடி வாரியாக தனித்தனி பைக ளில் பொருட்கள் இருக்க வேண்டும், எந்த ஒரு பொரு ளும் விட்டுப்போகாத வகை யில் மிகமிகக் கவனமாக அனைத்து பொருட்களும் சரியாக உள்ளதா என சரி பார்த்து பின்பரே அனுப்பி வைக்க வேண்டும். அனைத்து பொருட்களும் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையங்க ளில் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். பாரா ளுமன்றப் பொதுத்தேர்தல் வெளிப்படைத்தன்மையுடனும்,அமைதியாகவும் நடை பெற உங்கள் ஒவ்வொருவ ரின் பணியும் இன்றியமை யாதது எனத் தெரிவித்தார்.நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர்கள் தனலட் சுமி, (குளித்தலை), ராஜன் (முசிறி) ஆகியோர் உடனிரு ந்தனர்.
The post பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி மைய பொருட்கள் பிரித்து அனுப்பி வைக்கும் பணி appeared first on Dinakaran.