×
Saravana Stores

ஜெயங்கொண்டம் அருகே மது விற்ற இருவர் கைது

ஜெயங்கொண்டம்,ஏப்.17: ஜெயங்கொண்டம் அருகே அனுமதியின்றி டாஸ்மாக் மது விற்றவர்களை உடையார்பாளையம் போலீசார் கைது செய்தனர். உடையார்பாளையம் எஸ்ஐ திருவேங்கடம் மற்றும் போலீசார் சுத்தமல்லி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அவ்வழியே வந்தவர்களை விசாரணை செய்ததில் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்த போது மேலும் விசாரணையில் ஒருவர் அம்பாபூர் செந்தில் முருகன் (51) என்பதும் மற்றொருவர் வெண்மான் கொண்டான் வெண்ணிலவன் (51) என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் மது பாட்டில்களை விற்பனைக்காக எடுத்து வந்தது தெரிய வந்தது. உடனே அவர்களை எஸ்ஐ திருவேங்கடம் கைது செய்து அவர்களிடமிருந்து 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகிறார்.

The post ஜெயங்கொண்டம் அருகே மது விற்ற இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Jeyangondam ,Jayangkondam ,Vodiyarpalayam ,Tasmac ,Wodeyarpalayam SI Thiruvenkadam ,Sudtamalli ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தச்சுத்தொழிலாளி கைது