- தர்மபுரி
- லிதாரம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
- மாவட்ட தேர்தல் அதிகாரி
- கலெக்டர்
- சாந்தி
- தர்மபுரி நாடாளுமன்றம்
தர்மபுரி, ஏப்.17: தர்மபுரி இலக்கியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில், பதற்றமான வாக்குசாவடிகளில் இணையவழி கண்காணிப்பு கேமரா அமைக்கப்படுகிறது. இந்த பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதில் 320 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 1489 வாக்குசாவடிகளில் 967 வாக்குசாவடி மையங்களில் இணையவழி கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணி நடக்கிறது. பதற்றமான வாக்குச்சாவடிகள் அனைத்திலும் சிசிடிவி கேமரா மூலம் மாநில தேர்தல் ஆணையர் அலுவலகம் மற்றும் மாவட்ட தேர்தல் பொதுப்பார்வையாளர்கள், மாவட்ட கலெக்டர் ஆகியோர் இவ்வாக்குச்சாவடிகள் அனைத்தையும் நேரடியாக கண்காணிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகள் தேர்தல் நுண் பார்வையாளர்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
மேலும், பாதுகாப்பு அம்சங்கள் வாக்குசாவடி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள நுண் பார்வையாளர்கள் தேவையான கேமிராக்கள் மற்றும் தொடர்புடைய வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை விரிவாக ஆய்வு செய்ததுடன் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்றார். தேவையான அடிப்படை வசதிகளை வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்து மாவட்ட தேர்தல் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து தர்மபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில், வாக்குசாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்து பொருட்களும் தயார் நிலையில் உள்ளதையும், பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குசாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்து பொருட்களும் தயார் நிலையில் உள்ளதை கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம், வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தனப்பிரியா, மாவட்ட தகவலியல் அலுவலர் சத்தியமூர்த்தி, வட்டாட்சியர்கள் ஜெயசெல்வன், பார்வதி, ஆறுமுகம் மற்றும் தேர்தல் பொறுப்பு அலுவலர்கள்
உடனிருந்தனர்.
The post பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தம் appeared first on Dinakaran.