×

பீகாரில் விகாஷீல் ஸ்வராஜ் கட்சி காங்கிரசில் ஐக்கியம்

புதுடெல்லி: மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் பீகாரில் விகாஷீல் ஸ்வராஜ் கட்சியின் மூத்த தலைவர் பிரேம் குமார் சவுத்ரி மற்றும் கண் மருத்துவர் மணீஷ் குமார் யாதவ் இருவரும், காங்கிரஸ் கட்சியின் பீகார் மாநில பொறுப்பாளர் மோகன் பிரகாஷ், காங்கிரஸ் கமிட்டி தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் ஆகியோர் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர். அத்துடன் விகாஷீல் ஸ்வராஜ் கட்சியை காங்கிரசுடன் இணைத்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மோகன் பிரகாஷ், “இருவரையும் காங்கிரஸ் வரவேற்கிறது. இரண்டு தலைவர்களின் வருகையும் காங்கிரஸ் கட்சியை மேலும் பலப்படுத்தும்” என்றார்.

The post பீகாரில் விகாஷீல் ஸ்வராஜ் கட்சி காங்கிரசில் ஐக்கியம் appeared first on Dinakaran.

Tags : Vikashil ,Swaraj Party ,Congress ,Bihar ,NEW DELHI ,VIKASHIL SWARAJ PARTY ,SENIOR LEADER ,PREM KUMAR CHAUDHRY ,MANISH KUMAR YADAV ,LAKAWA ,ELECTION ,CONGRESS PARTY ,STATE ,MOHAN PRAKASH ,KIMI ,Unity ,Swaraj Party Congress ,Dinakaran ,
× RELATED ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.கவுடன்...