×

இஸ்லாமியர்கள் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் அனைத்து முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு வலியுறுத்தல்

நாகர்கோவில், ஏப். 17: குமரி மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமா அத் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஜி.எம்.எஸ்.ஷபிக் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வருகிற 19ம் தேதி நடக்க இருக்கிற பாராளுமன்ற தேர்தலில் இஸ்லாமியர்கள் அனைவரும் எந்த வித தயக்கமும் இல்லாமல் நமது ஜனநாயக கடமையான வாக்கு பதிவை நூறு சதவீதம் பதிவு செய்ய வேண்டும். வாக்களிக்கும் முன்னர் இந்திய குடியுரிமை சட்ட திருத்தம், இந்திய சிறுபான்மையினர் மற்றும் வருங்கால சந்ததியினரின் பாதுகாப்பு, மததுவேசம், வெறுப்பு அரசியல் ஆகியவற்றை நினைவில் கொண்டு, வேற்றுமையில் ஒற்றுகை காணும் இந்தியாவில் உண்மையான ஜனநாயகம் மலர்ந்திட சிறுபான்மையினரின் நலனை, பாதுகாப்பை உறுதி செய்யும் ஆட்சி வரவேண்டும் என்ற கருத்தை மனதில் வைத்து வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post இஸ்லாமியர்கள் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் அனைத்து முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : All Muslim Jamaat Federation ,Muslims ,Nagercoil ,Kumari ,District ,General Secretary ,GMS Shafiq ,Dinakaran ,
× RELATED கொளுத்தும் கோடை வெயில்; முக்கடல் அணை நீர்மட்டம் 0.9 அடியாக சரிந்தது