×

மாடு வாங்க சென்றவரிடம் ₹87 ஆயிரம் பறிமுதல் பொய்கை வாரச்சந்தையில்

குடியாத்தம், ஏப்.17: பொய்கை வாரச்சந்தையில் மாடு வாங்குவதற்காக லோடு ஆட்ேடாவில் சென்றவரிடம் ₹87 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவின்பேரில் குடியாத்தம் சட்டமன்ற தனி தொகுதி தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவை சேர்ந்த துணை பிடிஓ சதீஷ்குமார், தலைமை காவலர் சிவக்குமார், ஆயுதப்படை போலீஸ் தனலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினர் உள்ளி கிராமத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், உரிய ஆவணம் இல்லாமல் ₹87 ஆயிரத்து 700 கொண்டு சென்றது தெரிந்தது. விசாரணையில், குடியாத்தம் அடுத்த கருணீகசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த தாமோதரன்(66) என்பதும் பொய்கை வாரச்சந்தையில் மாடு வாங்குவதற்காக ஆட்ேடாவில் பணத்துடன் சென்றதாக தெரிவித்தனர். இருப்பினும் உரிய ஆவணம் இல்ைல என்பதால், அந்த பணத்தை நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பின்னர், அதனை தாசில்தார் சித்ராதேவி குடியாத்தம் கருவூலத்தில் செலுத்தினார்.

The post மாடு வாங்க சென்றவரிடம் ₹87 ஆயிரம் பறிமுதல் பொய்கை வாரச்சந்தையில் appeared first on Dinakaran.

Tags : Poikai ,Gudiatham ,Lodu Ateda ,Vellore Collector ,Subbulakshmi ,Deputy ,PTO ,Satish Kumar ,Kudiatham Legislative Assembly Special Constituency Election Status Monitoring Committee ,
× RELATED (வேலூர்) பயிற்சி நர்சிடம் சில்மிஷம்...