×

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு கூட்டம்

திண்டுக்கல், ஏப். 17: திண்டுக்கல்லில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் வளர்மதி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராசு வரவேற்றார். மாநில தலைவர் திருநாவுக்கரசு 18 வது நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் கடைபிடிக்க வேண்டிய கோரிக்கை குறிப்பு வெளியிட்டு சிறப்புரையாற்றினார். மாநில பொது செயலாளர் முஹமது பாதுஷா, மாநில நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், சுப்பிரமணி, சுதாகர் ஆகியோர் நூறு சதவீத வாக்குப்பதிவு, நேர்மையான தேர்தலை உறுதி செய்வதற்கான அவசியம் குறித்து பேசினர்.

கூட்டத்தில் அனைத்து கட்சி வேட்பாளர்களுக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கோரிக்கைகள் குறிப்பை வழங்குவது என்றும், மக்களிடையே எடுத்து செல்வது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில் நிர்வாகிகள் கவுதமன், ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் ஜாபர் நன்றி கூறினார்.

The post தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Science Movement District Executive Committee Meeting ,Dindigul ,District ,Executive ,Committee ,Tamil Nadu Science Movement ,Varamathi ,District Secretary ,Rasu ,State ,President ,Thirunavukarasu ,18th parliamentary election ,Tamil Nadu Science Movement District Executive Committee ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் பூதிபுரம் ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு