- பஞ்சாயத்து
- காஞ்சிபுரம்
- கோனேரிக்குப்பம் ஊராட்சி மன்றம்
- சைலாஜா
- கோனேரிக்குப்பம் ஊராட்சி
- காஞ்சிபுரம்…
- தின மலர்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவியாக சைலாஜா பதவி வகித்து வருகிறார். இவர் நேற்று மாலை வழக்கம்போல ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு திடீரென வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் தேர்தல் பணப் பட்டுவாடா செய்வதற்காக வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக புகார் வந்துள்ளது. அதனால் தங்கள் வீட்டை சோதனையிட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். எனவே, வீட்டுக்கு சென்ற சைலஜாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் பீரோ உள்ளிட்டவற்றை திறந்து காட்டச் சொல்லி சோதனையிட்டுள்ளனர்.
அப்போது பணம் ஏதும் சிக்காததால் வீட்டை சோதனை செய்ததற்கான ஒப்புகை கடித்ததை வாங்கிக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளனர். மேலும் தொடர்ந்து புகார் வரும் இடங்களில் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வாக்களிக்க பணம் தர இருப்பதாக புகார் ஊராட்சி மன்ற தலைவி வீட்டில் ரெய்டு appeared first on Dinakaran.