மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிவுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் இறுதியில் குறைந்து முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 456 புள்ளிகள் சரிந்து 72,944 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 23 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. இன்ஃபோசிஸ் பங்கு 3.6%, இன்டஸ்இண்ட் வங்கி பங்கு 3%, விப்ரோ, பஜாஜ் ஃபின்செர்வ் பங்குகள் தலா 2% விலை குறைந்தன.
எச்.சி.எல் டெக், டெக் மகிந்திரா பங்குகள் தலா 1.9%, பஜாஜ் பைனானஸ் பங்கு 1.8% விலை குறைந்து வர்த்தகமாயின. JSW டீல்ஸ், டிசிஎஸ் பங்குகள் தலா 1.7%, எல்&டி, ஐசிஐசிஐ வங்கி பங்குகள் தலா 1% விலை குறைந்தன. டைட்டன், இந்துஸ்தான் யுனிலீவர், எச்.டி.எஃப்.சி., மாருதி சுசூகி, பவர்கிரிட், ரிலையன்ஸ் பங்குகள் தலா 1% விலை குறைந்தன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 125 புள்ளிகள் சரிந்து 22,148 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.
The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 456 புள்ளிகள் சரிந்து 72,944 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!! appeared first on Dinakaran.