×
Saravana Stores

பிரதமர் மோடி வருகையை ஒட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக சாலையின் குறுக்கே கட்டப்பட்ட கயிற்றால் பறிபோன உயிர்

கேரளா: தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி வருகையை ஒட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக சாலையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி தூக்கி வீசப்பட்டு மனோஜ் உன்னி(28) என்ற இளைஞர் உயிரிழந்தார். சாலையின் குறுக்கே கயிறு கட்டப்பட்டுள்ளது என்பதை இரவு நேரத்தில் வாகன ஓட்டிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில் எந்த அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை என உயிரிழந்த மனோஜின் உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ந் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். நாடு முழுவதும் பாஜகவினர் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டுவருகின்றனர். பாரதிய ஜனதா தற்போது தென் மாநிலங்களில் உள்ள தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் மோடியும், தமிழகம் மற்றும் கேரளாவிற்கு அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார் அப்போது பாதுகாப்பு நடவடிக்கையாக ஆங்காங்கே தடுப்புகளையும், கயிறுகளும் கட்டி வைக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 14) இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் வடுதலைச் சேர்ந்த மனோஜ் உன்னி உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் கேரள மாநிலம் கொச்சி வருகையின் போது, ​​பெரும் பாதுகாப்பு குளறுபடி நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கு பாதுகாப்புக்காக கட்டப்பட்ட கயிற்றில் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் சிக்கி உயிரிழந்தார். நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி சாலையில் கயிற்றை கட்டியதாகவும், இரவில் இருட்டாக இருந்ததால், கயிறு கண்ணுக்கு தெரியாத நிலையில் இருந்ததாகவும், இந்த அலட்சியமே உன்னியின் உயிரிழப்பை ஏற்படுத்தியதாகவும் இறந்தவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

The post பிரதமர் மோடி வருகையை ஒட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக சாலையின் குறுக்கே கட்டப்பட்ட கயிற்றால் பறிபோன உயிர் appeared first on Dinakaran.

Tags : Modi ,Kerala ,Manoj Unni ,Dinakaran ,
× RELATED ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி: இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு