×

திமுகவினரின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் புகார்!

டெல்லி: திமுகவினரின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்துள்ளார். ஒன்றிய அரசின் அமைப்புகள் மூலம் திமுக வேட்பாளர்கள், முன்னணி நிர்வாகிகளின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது. சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் மூலம் திமுக நிர்வாகிகளின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகிறது.

நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய செல்போன் ஒட்டுக்கேட்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என திமுக தெரிவித்துள்ளது. சட்டவிரோத மென்பொருள் மூலம் திமுகவினரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் தெரிவித்துள்ளது. திமுகவின் முக்கிய பொறுப்பாளர்கள், வேட்பாளர்கள், அவர்களின் நண்பர்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்பு. உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்துள்ளார்.

 

The post திமுகவினரின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் புகார்! appeared first on Dinakaran.

Tags : DMK ,Election Commission ,Delhi ,RS Bharati ,Union government ,CBI ,Dinakaran ,
× RELATED பாதிக்கப்பட்ட வேட்பாளர்கள் இவிஎம்மை...