×

மஷ்ரூம் டிக்கா

தேவையான பொருட்கள்:

200 கிராம்ஸ் மஸ்ரூம்
1 குடைமிளகாய்
1 வெங்காயம்
1 மேஜைக்கரண்டி வெண்ணெய்
மசாலாவிற்கு தேவையானவை
2 மேஜைக்கரண்டி தயிர்
1 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள்
1/4 டீஸ்பூன் மிளகுத்தூள்
1 மேஜைக்கரண்டி கடலை மாவு
தேவையான அளவு உப்பு
1/2 தேக்கரண்டி சீரகத்தூள்
1/2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது.

செய்முறை:

மசாலாவிற்கு குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பேஸ்ட் போல் தயார் செய்யவும். காளானை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும். குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை சதுரத் துண்டுகளாக நறுக்கி எடுக்க வேண்டும். தயார் செய்துள்ள மசாலாக் கலவையில் நறுக்கி வைத்துள்ள காய்களை சேர்த்து நன்றாக பிரட்டி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். இரண்டு மணி நேரம் கழித்து ஒன்றன்பின் ஒன்றாக மாற்றி மாற்றி கிரில் குச்சியில் அல்லது மரக்குச்சியில் சுருக்கி வைக்கவும். தயார் செய்த குச்சிகளை கிரில் பேன் அல்லது சாதாரண தோசைக்கல்லில் வைத்து கொஞ்சமாக வெண்ணெய் தடவி நாலா பக்கமும் திருப்பி வைத்து சுட்டு
எடுத்தால் சுவையான மஷ்ரூம் டிக்கா தயார்.

The post மஷ்ரூம் டிக்கா appeared first on Dinakaran.

Tags :
× RELATED இளநீர் நன்னாரி ஜூஸ்