- சோர்வடைந்த
- சித்ரா விழா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திருவிவையூர்
- கல்யாண
- வரதராஜ பெருமாள்
- இசை
- சென்னை
- ராமா நவமியோதி
- கல்யாண வரதராஜா பெருமாள் கோயில்
- Thiruvaiyur
- கலடிப்பெட்
- திருக்கட்டம் சித்ரா விழா
- திருவையூர் கல்யாண வரதராஜா
- பெருமாள்
- இசைக்கருவிகள்
சென்னை: சித்திரை மாதத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சைவ, வைணவ கோயில்களிலும் சித்திரை திருவிழாக்கள் கலைக்கட்டியுள்ளன. சென்னை திருவெற்றியூர் காலடிபேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் ராம நவமியையொட்டி நடைபெறும் 9 நாள் உற்சவம் களைகட்டியுள்ளது. 7ம் நாளான நேற்று அலங்கரிக்கப்பட்ட தேரில் சீதா, ராமன், லட்சுமணனுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நாகஸ்வரம், பறை, உருமி உள்ளிட்ட இசை கருவிகள் முழங்க நான்கு மாட வீதிகளிலும் சீதா, ராமர் வளம் வந்தார்.
திருவண்ணாமலை கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை வசந்த உற்சவத்தையொட்டி அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன் வெட்டிவேர் பல்லக்கில் எழுந்தருளி 3ம் பிரகாரத்தில் உள்ள பன்னீர் மண்டபத்தில் மகிழ மரத்தை பத்து முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அப்போது இருவரையும் மகிழ்விக்கும் வகையில் பாவை வடிவிலான பொம்மை ஒவ்வொரு சுற்று முடிவிலும் பூக்கொட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள பிரம்ம புரிஸ்வரர் கோயிலில் சித்திரை பெருவிழா விமர்சியாக நடைபெற்று வருகிறது. இதன் 2ம் நாளான நேற்று திருமுலைப்பால் விழா நடைபெற்றது. தனி சன்னதியில் உள்ள திருஞானசம்பந்தருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. திருநிலைநாயகி அம்மன் தங்கக் கிண்ணத்தில் ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சியும், திருஞானசம்பந்தருக்கு காட்சியளிக்கும் வைபோவமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஆர்.பாலக்குருச்சியில் சித்திரை பொங்கலையொட்டி தேரோட்டம் விமர்சியாக நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுக்கு பிறகு அலங்கரிக்கப்பட்ட முத்துமாரியம்மன் திருவீதி உலா வந்த பிறகு தேரில் வீற்றிருக்க மா, பலா, வாழை என முக்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.
இதேபோல் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. சித்திரை திருவிழாவின் 9ம் நாள் நிகழ்ச்சியாக நடைபெற்ற தேரோட்டத்தில் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
The post தமிழ்நாடு முழுவதும் கோயில்களில் களைகட்டும் சித்திரைத் திருவிழா: திருவெற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் இசைக்கருவிகள் முழங்க வீதியுலா!! appeared first on Dinakaran.