×

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக தொடங்கியது

திருச்சி: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக தொடங்கியது. அம்மன் எழுந்தருளிய தேரை லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடுத்து இழுத்து வழிபாடு செய்து வருகின்றனர். ஓம் சக்தி… பரா சக்தி… என விண்ணதிர பக்தி கோஷம் விண்ணைப்பிளக்க பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து பக்தர்கள் இழுத்து வருகின்றனர்.

பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்ட திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சித்திரை தேரோட்ட திருவிழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு அனுதினமும் உற்சவ அம்மன் சிம்ம வாகனம் பூத வாகனம் அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி தேரோடும் வீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் சக்தி.. பராசக்தி என விண்ணதிரும் பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

தேரோட்டத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சமயபுரத்திற்கு வருகை தந்து மாரியம்மனை தரிசனம் செய்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர். திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜீத்குமார் உத்தரவின் பேரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Trinchi Samayapuram Mariyamman Temple ,Tiruchi ,Tirichi Samayapuram Mariyamman Temple ,Amman ,Samayapuram Maryamman Temple ,
× RELATED மணல் திருடியவருக்கு போலீசார் வலை