×

“எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணா” – வில்லேஜ் குக்கிங் சேனலின் நிர்வாகி சுப்ரமணியன் வேலுசாமி

சென்னை: எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணா என வில்லேஜ் குக்கிங் சேனலின் நிர்வாகி சுப்ரமணியன் வேலுசாமி தெரிவித்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி வில்லேஜ் குக்கிங் சேனலில் இருப்பவர்களுடன் இணைந்து சமைத்து சாப்பிட்டார். இந்த வீடியோ இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது. முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடக்கவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இந்த சேனலில் இருக்கும் தாத்தாவிற்கு இதய பாதிப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என்று வில்லேஜ் குக்கிங் சேனல் தெரிவித்தது. இந்த இதய பாதிப்பிற்கு உதவி கேட்டு.. அதை ராகுல் காந்தி செய்யவில்லை என்று பொய்யான செய்திகள் இணையத்தில் பரவி வந்தது. மருத்துவ செலவிற்கு வில்லேஜ் குக்கிங் சேனல் உதவி கேட்டதாகவும், அதை ராகுல் காந்தி மறுத்துவிட்டதாகவும் செய்திகள் பொய்யாக பரவியது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் உடனடியாக வில்லேஜ் குக்கிங் சேனல் தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது. அதில், ”இது முற்றிலும் பொய்! எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணாவின் மீது இப்படி எங்களையே பயன்படுத்தி அவதூறு பரப்புவது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது! இப்படி பொய் செய்திகளை பரப்புபவர்களது கட்சி தலைமை இதனை கட்டுப்படுத்த வேண்டுகிறோம் என அந்த சேனலின் அட்மின் சுப்பிரமணியன் வேலுசாமி தெரிவித்துள்ளார்.

The post “எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணா” – வில்லேஜ் குக்கிங் சேனலின் நிர்வாகி சுப்ரமணியன் வேலுசாமி appeared first on Dinakaran.

Tags : Rahul Anna ,Subramanian Velusamy ,Village Cooking Channel ,Chennai ,Rahul Gandhi ,Tamil Nadu ,2021 Assembly elections ,
× RELATED விக்ரம் திரைப்படத்தில் நடித்ததற்காக...