×
Saravana Stores

நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை நிராகரிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை : நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை நிராகரிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தேர்தல் நடவடிக்கைகள் முடியும் தருவாயில் இருப்பதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று ஐகோர்ட் திட்டவட்டமாக தெரிவித்தது. மதுரை வழக்கறிஞர் மகாராஜா என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேர்தல் முடிந்த பிறகு வேண்டுமானால் மனுதாரர் தேர்தல் ஆணையத்தை நாடலாம் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

The post நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை நிராகரிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Nellie ,BJP ,Naynar Nagendran ,CHENNAI ,Nayanar Nagendran ,Nella ,Madurai ,Maharaja ,Nayanar Nagendra ,Dinakaran ,
× RELATED நெல்லை பல்கலைக்கழகத்தில் ஏவிபி மாநில...