×
Saravana Stores

மறைந்த முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை: மறைந்த முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தயாநிதிமாறன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இந்திரகுமாரி காலமானார். சென்னை அடையாறு காந்திநகர் இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

திமுக இலக்கிய அணி தலைவரும், முன்னாள் அமைச்சருமான இந்திர குமாரி, உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 73. சிறுநீரக பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் , சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இவரின் கணவர் வழக்கறிஞராவார். இவருக்கு லேகா என்ற ஒரு மகள் உள்ளார். 1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இந்திர குமாரி இடம்பிடித்திருந்தார். தொட்டில் குழந்தை திட்டம் உருவாக முக்கிய காரணமாகவும் இவர் திகழ்ந்தார்.

தமிழ் மீது தீராத பற்று கொண்டிருந்த இந்திரகுமாரி 2006-ல் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். அவருக்கு இலக்கிய அணி மாநிலத் தலைவர் பதவியை வழங்கியது. உடல்நலக்குறைவால் காலமான இந்திரகுமாரியின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். இன்று மாலை 4.30 மணியளவில் இந்திரகுமாரி உடல் பெசன்ட் நகர் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

 

 

The post மறைந்த முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Indrakumari ,chief minister ,K. ,Stalin ,Chennai ,Sekharbhabu ,Ma. Subramanian ,Dayanitimharan ,Gandhi Nagar Residence ,Dinakaran ,
× RELATED நாமக்கல்லில் கலைஞர் சிலை அமைவது மிக...