×

ஏப். 21ல் நடக்கிறது நடந்து சென்றவரிடம் பணம் பறித்தவர் கைது

திருச்சி, ஏப்.16: திருச்சியில் நடந்து சென்ற வாலிபலிடம் கத்தியை காட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி பாலக்கரை காஜாபேட்டை மதுரை வீரன் தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி(23). இவர் நேற்று முன்தினம் மதியம் பீமநகர் கூனிபஜாரில் உள்ள டீக்கடை அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் வழிமறித்து பணம் கேட்டார். தர மறுத்ததால் கத்தியை காட்டி மிரட்டி பால்பாண்டியிடம் ரூ.700ஐ வாலிபர் பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து கோரிமேடு கூனிபஜாரை சேர்ந்த வீரமணி(34) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து கத்தி, பணத்தை பறிமுதல் செய்தனர்.

The post ஏப். 21ல் நடக்கிறது நடந்து சென்றவரிடம் பணம் பறித்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Trichy ,Balpandi ,Madurai Veeran Street ,Trichy Balakarai Gajapet ,Bhimanagar Kunibazar ,
× RELATED ஏர்போர்ட் பகுதியில் குட்கா விற்ற பெண் கைது