- தேசிய பாதுகாப்பு நிறுவனம்
- மத்திய அரசு சேவை ஆணையம்
- திருச்சி மாவட்டம்
- திருச்சி
- தேசிய பாதுகாப்பு அகாடமி
- கடற்படை அகாடமி
- ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள்
- யூனியன் அரசு ஊழியர்கள் ஆணையம்
- யுபிஎஸ்சி
- தேசிய
- பாதுகாப்பு நிறுவனம்
- தேர்வுகள்
- தின மலர்
திருச்சி, ஏப்.16: மத்திய அரசுப்பணியாளா் தோ்வாணையத்தால் (UPSC) நடத்தப்படவுள்ள நேஷனல் டிபன்ஸ் அகாடமி அண்ட் நேவல் அகாடமி அண்ட் கம்பைன்ட் டிபன்ஸ் சர்வீசஸ் நடத்தும் தேர்வு.1 (National Defence Academy and Naval Academy and Combined Defence Services Examination (I)) தோ்வுகள் வரும் ஏப்.21ம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுப்பணியாளா் தோ்வாணையத்தால் (UPSC) நடத்தப்படவுள்ள நேஷனல் டிபன்ஸ் அகாடமி அண்ட் நேவல் அகாடமி அண்ட் கம்பைன்ட் டிபன்ஸ் சர்வீசஸ் நடத்தும் தேர்வு.(I)க்குரிய (National Defence Academy and Naval Academy and Combined Defence Services Examination (I) ) தோ்வுகள் வரும் ஏப்.21 ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. இத்தோ்வு திருச்சி மாவட்டத்தில் மூன்று தோ்வு மையங்களில் நடைபெறவுள்ளது. இத்தோ்வினை மொத்தம் 674 தோ்வா்கள் எழுதவுள்ளனா். இதற்காக 3 தேர்வுக்கூட மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இப்போட்டித்தோ்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை தோ்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியை மேற்கொள்ள ஒரு இயங்கு குழு (Mobail Unit) அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் துணை கலெக்டர் நிலையிலுள்ள ஒரு அலுவலா், துணை வட்டாட்சியர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், ஆயுதம் ஏந்திய காவலா் ஒருவர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தோ்வு மையத்தை ஆய்வு செய்யும் பொருட்டு வட்டாட்சியா் நிலையில் (Inspection Officer) மூன்று ஆய்வு அலுவலாகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். தோ்வு மையத்தில் போலீசார் பாதுகாப்பு பணிக்கு போலீசார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசு பணியாளா் தோ்வாணையத்தால் வழங்கப்பட்டுள்ள கொரோனா முன்னெச்சாிக்கை நடவடிக்கைகளும் தோ்வு மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தோ்வு மையத்தை கண்காணிக்க 3 ஆண் போலீசார் மற்றும் 2 பெண் போலீசார் என மொத்தம் 5 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வு அறைகளில் தோ்வு எழுதும் ஒவ்வொரு 24 தோ்வா்களுக்கும் இரண்டு அறை கண்காணிப்பாளா்கள் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தோ்வு எழுத வரும் தோ்வாளா்கள் செல் போன் உள்ளிட்ட எவ்வித மின்னணு சாதனங்களும் தோ்வு மையங்களுக்கு எடுத்து வர அனுமதி இல்லை என தோ்வாணையம் தெரிவித்துள்ளதாக மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
The post திருச்சி மாவட்டத்தில் மூன்று மையங்களில் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேசிய பாதுகாப்பு கழக தேர்வுகள் appeared first on Dinakaran.