×
Saravana Stores

பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்

பெரம்பலூர்,ஏப்.16: பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை புகுந்துள்ளதாக பரவி வரும் தவறான தகவலை பொதுமக்கள் நம்ப வேண் டாம்-பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கலெக்டர் கற்பகம் வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருப்பதாவது :பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் இரண்டு சிறுத்தைகள் புகுந்துள்ளதாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் ஒரு வீடியோவு டன் பொய்யான செய்தி உலா வந்து கொண்டிருக்கின்றது.அந்த வீடியோவில் இரண்டு சிறுத்தைகள் இரு ப்பது போன்ற காட்சிகள் மகராஸ்ட்டிரா மாநிலம் ஜீன்னார் என்னும் பகுதி யில் பதியப்பட்ட வீடியோ வாகும்.

மேலும், இது போன்றதவறான வீடியோக் களை தகுந்த ஆதாரம் இன்றி இணையதளம் மற்றும் சமூக வலைதளங் கள் வாயிலாக பரப்பி பொதுமக்களை பீதிக்குள் ளாக்கும் வகையிலான செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவ டிக்கை எடுக்கப்படும். அரியலூர் மாவட்டம், செந் துறை பகுதியில் தென்பட்ட சிறுத்தையை பிடிப்பதற்கு அரியலூர், பெரம்பலூர், கடலூர் கால்நடை சிறப்பு மருத்துவர்கள், வனத் துறையின் சிறப்புக் குழு வினர் மற்றும் சிசி டிவி கேமராக்கள், ட்ரோன் கேமராக்கள் கொண்டு தேடும் பணியா னது தொடர்ந்து மேற் கொண்டு வருகின்றனர். எனவே, பொதுமக்கள் இது போன்ற போலியான செய்திகளை நம்ப வேண்டாம் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல் appeared first on Dinakaran.

Tags : PERAMBALUR DISTRICT ,Perambalur ,Ven Tom-Perambalur District Collector's Office ,Collector's Office ,Dinakaran ,
× RELATED நிலமற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர்...