×
Saravana Stores

நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்

நாகப்பட்டினம், ஏப்.16: நாகப்பட்டினம் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாகப்பட்டினம் எஸ்பி அலுவலகத்தில் காவல் துறையினர் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

எஸ்பி ஹர்ஷ்சிங் தலைமை வகித்து பேசியதாவது:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதராண்யம் என 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் காவலர்கள் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும். வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களிடம் கடுமையான வார்த்தைகளை பேச கூடாது.

கனிவுடன் வாக்காளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். காவலர்கள் அளிக்கும் கோபமான பதிலால் வாக்குப்பதிவு மையத்தில் பிரச்சனை எழுந்து விடக்கூடாது. கட்சியினர் பாகுபாடு இல்லாமல் பொறுப்புணர்வுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும். வாக்குப்பதிவு மையத்தில் இந்திய தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள சட்ட விதிமுறைகளை பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் பின்பற்ற வேண்டும் என்றார். நாகப்பட்டினம் மாவட்ட அனைத்து காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

The post நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Nagapattinam SP ,parliamentary ,SP ,Harsh Singh ,Nagapattinam district ,Kilivelur ,Dinakaran ,
× RELATED சிறுமி பலாத்காரம் செய்து எரித்துக்...