×

விழுப்புரம் அருகே பரபரப்பு அரசு பேருந்தை வழிமறித்து பிறந்தநாள் கேக் வெட்டிய வாலிபர்

விழுப்புரம், ஏப். 16: விழுப்புரம் அருகே அரசு பேருந்தை வழிமறித்து பிறந்தநாள் கொண்டாடியதை தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல் நடத்தியது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் அருகே தளவானூரை சேர்ந்தவர் நரேஷ். இவர் நேற்று முன்தினம் இரவு நண்பர் அருண் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அருணுக்கு பிறந்தநாள் என்பதால் கேக் வாங்கி கொண்டு கொண்டாடுவதற்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது தளவானூரிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பேருந்தை திருப்பாச்சனூரில் வழிமறித்த நரேஷ் பேருந்து முன்பு பிறந்தநாள் கேக் வெட்ட முயன்றுள்ளார். அப்போது பேருந்தில் பயணித்த தளவானூரை சேர்ந்த மோகன் என்பவர் கீழே இறங்கி வந்து நீங்கள் பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்காக பேருந்தை நிறுத்தலாமா என்று கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நரேஷ் தன் கையில் வைத்திருந்த இருசக்கர வாகனத்தின் சாவியால் மோகனின் தலையில் அடித்து மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் நரேஷ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விழுப்புரம் அருகே பரபரப்பு அரசு பேருந்தை வழிமறித்து பிறந்தநாள் கேக் வெட்டிய வாலிபர் appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Naresh ,Thalavanur ,Arun ,
× RELATED சாலை விரிவாக்கத்தால் அகற்றம்...