×

எடப்பாடி பிரதமராக வாய்ப்பிருக்கு…: ஜோசியம் சொல்லும் பிரேமலதா

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்தும், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: அதிமுக, தேமுதிக கூட்டணி வெற்றி கூட்டணி. இந்த கூட்டணியில் 4 கட்சிகள் உள்ளது. 40 இடங்களிலும் இந்த கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மிகப்பெரிய வெற்றியை பெறுவார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமராகும் வாய்ப்பு உள்ளது. எல்லா கருத்துக்கணிப்புகளும் இதையேதான் உறுதிப்படுத்துகின்றன.

அரசியலில் எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். அத்தியாவசிய பொருள், சமையல் எரிவாயு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்றவற்றால் பாஜ மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் பாஜ கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற கோபம் மக்கள் மத்தியில் உள்ளது. இந்த தேர்தல் என்பது போருக்கு சமமானது. என் மகனை போர்க்களத்திற்கு அனுப்பியுள்ளேன். அவர் போரிட்டு வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

The post எடப்பாடி பிரதமராக வாய்ப்பிருக்கு…: ஜோசியம் சொல்லும் பிரேமலதா appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Premalatha ,DMDK ,Vijaya Prabhakaran ,Virudhunagar Parliamentary ,Constituency ,General Secretary ,Premalatha Vijayakanth ,Virudhunagar Parliamentary Constituency ,AIADMK ,Dinakaran ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...