- விழிப்புணர்வு பேரணி
- ராஜபாளையம்
- மாவட்ட தேர்தல் அதிகாரி
- மாவட்ட கலெக்டர்
- தமிழ்
- தமிழ்நாடு
- மாநில கிராமப்புற வாழ்வாதாரம்
- இயக்கம்
- ராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்
ராஜபாளையம், ஏப். 16: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் தேர்தலில் வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர்கள் கலந்து கொண்ட மோட்டார் வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.
நாடாளுமன்றத் தேர்தல்- 2024 நடைபெறயுள்ளதையொட்டி 18 வயது நிரம்பிய முதல் முறை வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், அதிக முறை வாக்களித்த மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள் என அனைத்து தரப்பு வாக்காளர்களிடையே 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறும் வகையில், விழிப்புணர்வு பேரணி, கையெழுத்து இயக்கம், ரங்கோலி வரைதல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ராஜபாளையம் வட்டார இயக்க மேலாண்மை அலகு அலுவலகத்தில் இருந்து வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, மகளிர்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண் அலுவலர்கள், வட்டார இயக்க பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) பேச்சியம்மாள், மாவட்ட வழங்கல் அலுவலர் அனிதா, உதவி திட்ட இயக்குநர்கள் உட்பட அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி ராஜபாளையத்தில் டூவீலர் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.