×

திருவாடானை அரசு கல்லூரியில் இரண்டாம் கட்ட பயிற்சி முகாம்

திருவாடானை, ஏப்.16: மக்களவை தேர்தலை முன்னிட்டு திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திருவாடானை சட்டமன்ற தொகுதி உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் மாரிச்செல்வி தலைமையில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட தொடர் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் திருவாடானை சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு அலுவலர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு கையாள்வது,

வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான கையேடு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் கண்பார்வையற்றோர் உட்பட மூத்த குடிமக்களை வாக்குப்பதிவு செய்வதற்கு உதவுதல் உள்ளிட்ட பணிகளுக்கான பயிற்சி நடந்தது. வகுப்புகளை நடத்த ஒரு அறைக்கு 40 பேர் வீதம் 32 அறைகளில் கலந்து கொண்ட அனைத்து வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகளை மண்டல அலுவலர்கள் நடத்தினர்.

இந்த நிகழ்வில் திருவாடானை வட்டாட்சியர் கார்த்திக்கேயன், ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post திருவாடானை அரசு கல்லூரியில் இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : Phase ,Thiruvadan ,Government ,College ,Thiruvadanai ,Lok Sabha ,Thiruvadanai Government College of Arts and Sciences ,Assistant Election Officer ,Marichelvi ,Thiruvadanai Government College ,Dinakaran ,
× RELATED 4-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான...