×

தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த ரூ.4 கோடி நகைகள் திரும்ப ஒப்படைப்பு

மதுரை, ஏப்.16: மதுரையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி மதிப்புடைய நகைகள் வருமானவரித்துறை மற்றும் வணிகவரித்துறை ஆய்வுக்கு பிறகு திரும்ப ஒப்படைக்கப்பட்டன. மதுரை மாநகர் வண்டியூர் டோல்கேட் பகுதியில் கடந்த 12ம் தேதி தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுரை விமானநிலைய பகுதியில் இருந்து அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். இதில், அந்த வாகனத்தில் ரூ.4 கோடி மதிப்பிலான தங்க நகைகள் இருப்பது தெரிய வந்தது.

விசாரணையில், தென்மாவட்டங்களில் உள்ள பல்வேறு நகைக்கடைக்கு சப்ளை செய்வதற்காக நகைகள் எடுத்துச்செல்லப்பட்டது தெரிய வந்தது. ஆனால் தங்க நகைகளுக்கான போதுமான உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்து மதுரை கலெக்டர் அலுவலக கருவூலத்திற்கு கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டது. இதனையடுத்து நகைகள் மற்றும் அதன் ஆவணங்கள் குறித்து வணிகவரி மற்றும் வருமானவரித்துறை ஆய்வு செய்தது. நகைகளுக்கான ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அதனை அதிகாரிகள் சரிபார்த்து முறையாக இருந்ததால் நகைகள் விடுவிக்கப்பட்டது. இந்த நகைகள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டன.

The post தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த ரூ.4 கோடி நகைகள் திரும்ப ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Income Tax and Commercial Tax Departments ,Election Flying Squad ,Vandiyur Tollgate ,Madurai City ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணி முடிந்து வீடு திரும்பிய காவலர் மரணம்..!!