×

மகனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி; நீதிமன்றத்தில் தாய் தற்கொலை

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த வாரபாளையம் தெக்கலூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராமசாமி. இவருக்கு கோவிந்தம்மாள் (60) என்ற மனைவியும், சதீஷ்குமார் (30) என்ற மகனும், பிரியா (27) என்ற மகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோன ராமசாமிக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலம் தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் பின்புறம் உள்ளது.

இந்நிலையில் சொத்து சம்பந்தமாக கோவிந்தம்மாளுக்கும், சதீஷ்குமாருக்கும் தாராபுரம் சார்பு நீதிமன்றத்தில் பாகப்பிரிவினை குறித்து வழக்கு சில ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த வழக்கில் விசாரணையின்போது கோவிந்தம்மாள் முறையாக விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பதாலும், உரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்காததாலும் கடந்த 3ம் தேதி கோவிந்தம்மாள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி ஆனது.

இந்த நிலையில் நேற்று காலை தாராபுரம் நீதிமன்ற வளாகத்துக்கு கோவிந்தம்மாள் வந்தார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சிலரிடம் கோவிந்தம்மாள் வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

The post மகனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி; நீதிமன்றத்தில் தாய் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Dharapuram ,Ramasamy ,Thekalur village ,Warapaliam, Tiruppur district ,Tharapuram ,Govindhammal ,Satish Kumar ,Priya ,
× RELATED திண்டுக்கல்லில் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு கலெக்டர் மரியாதை