×

இரணியலில் 32 மி.மீ மழை பதிவு

நாகர்கோவில், ஏப்.16: குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் இந்தமழை காணப்படுகிறது. நேற்று காலை முதல் வெயில் கொளுத்திய நிலையிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாவட்டத்தில் நேற்று காலை வரை அதிகபட்சமாக இரணியலில் 32 மி.மீ மழை பெய்திருந்தது. குளச்சலில் 18.8, பாலமோர் 5.4, மாம்பழத்துறையாறு 5, அடையாமடை 3.2, குருந்தன்கோடு 11.8, முள்ளங்கினாவிளை 3.2, ஆனைக்கிடங்கு 4.6, முக்கடல் 5.6 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 42.34 அடியாக இருந்தது. அணைக்கு 138 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. அணை மூடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 47.75 அடியாகும். அணைக்கு 43 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 21 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. சிற்றார்-1ல் 9.28 அடியும், சிற்றார்-2ல் 9.38 அடியும் நீர்மட்டம் உள்ளது. பொய்கையில் 16.30 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 20.83 அடியும் நீர்மட்டம் உள்ளது. முக்கடல் அணையின் நீர்மட்டம் 8.80 அடியாகும்.

The post இரணியலில் 32 மி.மீ மழை பதிவு appeared first on Dinakaran.

Tags : Nagarko ,Kumari district ,
× RELATED வெயில் அதிகரித்து வருவதால் கோட்டார்...