×

பள்ளி ஆண்டு விழாவில் விளையாட்டில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் உள்ள டிஜெஎஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு டிஜெஎஸ் கல்வி குழும தலைவரும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கி, விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்ததோடு ஆண்டு விழாவில் சிறப்புரையாற்றினார்.விழாவில் பள்ளி முதல்வர் பி.ஞானப்பிரகாசம் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து மாணவர்களின் தற்காப்பு கலை, யோகா, நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பட்டிமன்ற பேச்சாளர் புலவர் எம்.ராமலிங்கம் பங்கேற்று பேசினார். இந்த கல்வியாண்டில் கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும், பல்வேறு போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும், சிறந்த ஆசிரியர்களுக்கும், ஊக்கத்தொகை மற்றும் கோப்பை, பதக்கம் சான்றிதழ்களை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், புலவர் எம்.ராமலிங்கம் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் டிஜெஎஸ் கல்வி குழும செயலாளர் டி.ஜெ.ஆறுமுகம், துணை தலைவர் டி.ஜெ.தேசமுத்து, பள்ளி தாளாளர் ஏ.பழனி, டிஜெஎஸ் கல்வி குழும இயக்குநர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post பள்ளி ஆண்டு விழாவில் விளையாட்டில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,DJS Matric Higher Secondary School ,Peruwayal ,DJS Education Group ,President ,MLA ,TJ Govindarajan ,
× RELATED குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை...