×

நாட்டின் மிகப்பெரிய பயங்கரவாதியை பிடித்தது போல் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் நடத்துகிறார்கள்: பஞ்சாப் முதல்வர்!

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த மாதம் 21-ம் தேதி கைது செய்தது. டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர், அமலாக்கத்துறை காவலில் வைத்து 10 நாட்கள் விசாரிக்கப்பட்டார். இதையடுத்து, நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், திகார் சிறையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்த பிறகு, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேட்டியில் கூறுகையில்; சிறையில் கடும் குற்றவாளிகளுக்கு கிடைக்கும் வசதிகள்கூட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொடுக்காதது வருத்தம் அளிக்கிறது. அவர் என்ன தவறு செய்தார்? நாட்டின் மிகப்பெரிய பயங்கரவாதியை பிடித்தது போல் அவரை நடத்துகிறார்கள்.

பிரதமருக்கு என்ன வேண்டும்? வெளிப்படைத்தன்மை அரசியலை தொடங்கி பா.ஜ.க.,வின் அரசியலுக்கு முடிவு கட்டிய நேர்மையான அரவிந்த் கெஜ்ரிவால் இப்படி நடத்தப்படுகிறார். எப்படி இருக்கிறீர்கள் என்று கெஜ்ரிவாலிடம் கேட்டதற்கு, என்னை விடுங்கள், பஞ்சாபில் விஷயங்கள் எப்படி நடக்கின்றன என்று கேட்டார். ஏனென்றால், நாங்கள் அரசியலை பணியாக செய்கிறோம். நாங்கள் கெஜ்ரிவாலுடன் நிற்கிறோம். மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் ஜூன் 4-ஆம் தேதி, ஆம் ஆத்மி மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவாகும். என்று கூறியுள்ளார்.

 

The post நாட்டின் மிகப்பெரிய பயங்கரவாதியை பிடித்தது போல் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் நடத்துகிறார்கள்: பஞ்சாப் முதல்வர்! appeared first on Dinakaran.

Tags : Arvind Kejriwal ,Punjab ,Chief Minister ,Delhi ,The Enforcement Directorate ,Delhi Liquor ,
× RELATED மருத்துவ உதவி கோரிய டெல்லி முதல்வர்...