- மக்களவைத் தேர்தல்
- தமிழ்நாடு போக்குவரத்து துறை
- சென்னை
- மக்களவை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- புதுச்சேரி
- தின மலர்
சென்னை : ஏப்.19-ம் தேதி மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க முன்கூட்டியே சொந்த ஊருக்கு பயணிக்க போக்குவரத்துத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக 40 தொகுதிகளில் வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தேர்தலையொட்டி போக்குவரத்துத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சிறப்பு ஏற்பாடுகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வரும் 17, 18-ம் தேதிகளில், சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு நாள்தோறும் இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன், கூடுதலாக 2,970 சிறப்புப் பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து கூடுதலாக 3,060 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
தேர்தல் முடிந்த பிறகு பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 20, 21-ம் தேதிகளில் தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 1,825 சிறப்புப் பேருந்துகளும், பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 2,295 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அதன்படி, 4 நாள்களுக்கும் சேர்த்து 10,150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், கூட்ட நெரிசலைத் தவிர்க்க பயணிகள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்குமாறு போக்குவரத்துத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க வரும் 16, 17ம் தேதிகளில் பயணம் மேற்கொள்ள போக்குவரத்துத்துறை அறிவுறுத்தி உள்ளது.
The post மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வரும் 16, 17ம் தேதிகளிலேயே சொந்த ஊர் செல்லுங்கள்… தமிழக போக்குவரத்துத் துறை அறிவுரை!! appeared first on Dinakaran.