×

தமிழ்நாட்டின் அனைத்து தொழிற்சங்கங்களும் திமுக தலைமையிலான I.N.D.I.A. கூட்டணிக்கு ஆதரவு..!!

சென்னை: தொழிலாளர்கள், விவசாயிகள், மக்கள் விரோத மோடி அரசை வீழ்த்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாட்டின் அனைத்து தொழிற்சங்கங்களும் திமுக தலைமையிலான I.N.D.I.A. கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளன. தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ் உள்ளிட்ட 12 தொழிற்சங்கங்கள் கூட்டாக வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக ஆட்சியில் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம், ஓய்வூதியம், பணி பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு, பணியிட பாதுகாப்பு என அனைத்தும் கேள்வி குறியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆஷா செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், உணவுகளை டெலிவரி செய்யும் கிக் ஊழியர்கள் உள்ளிட்ட 30 கோடி பேர் தொழிலாளர்கள் என்ற வரையறையில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்கள், மோட்டார் வாகன திருத்த சட்டம், மின்சாரம் திருத்த சட்டம் போன்றவற்றை திரும்ப பெறவும் தொழிலாளர்கள் விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படவும், I.N.D.I.A. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் தொழிற்சங்கங்களின் கூட்டறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டின் அனைத்து தொழிற்சங்கங்களும் திமுக தலைமையிலான I.N.D.I.A. கூட்டணிக்கு ஆதரவு..!! appeared first on Dinakaran.

Tags : Trade ,of Tamil Nadu ,DMK ,INDIA ,CHENNAI ,Tamil Nadu ,Modi government ,Thomusa ,CITU ,AITUC ,INDUC ,HMS ,All Trade Unions of Tamil Nadu ,INDIA alliance ,
× RELATED PWD மூலம் மட்டுமே கட்டுமானம் மேற்கொள்ள அரசாணை..!!