×

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு; அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 23ம் தேதி வரை நீட்டித்து ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 23ம் தேதி வரை நீட்டித்து ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 9 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.இந்த சம்மனை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த மாதம் 20ம் தேதி விசாரணைக்கு வந்தபோது கெஜ்ரிவால் மீதான சட்ட நடவடிக்கைக்கு தடை விதிக்க கோர்ட்டு மறுத்துவிட்டது.

இதனிடையே, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலை கடந்த மாதம் 21ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் திகார் சிறையில் உள்ள அவர் இன்று டெல்லி ரோஸ் அவன்யூ காணொலி காட்சி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, கெஜ்ரிவாலை மேலும் விசாரிக்கவேண்டியுள்ளதால் அவரது நீதிமன்ற காவலை நீட்டிக்கவேண்டுமென அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.அந்த கோரிக்கையை ஏற்ற டெல்லி கோர்ட்டு, அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை 23ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

The post மதுபான கொள்கை முறைகேடு வழக்கு; அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 23ம் தேதி வரை நீட்டித்து ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Rose Avenue Court ,Arvind Kejriwal ,Delhi ,Chief Minister ,Maharashtra ,Arvind ,
× RELATED அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில்...