×

ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் சன்ரைசர்ஸ்; தோல்வியில் இருந்து மீளுமா ஆர்சிபி? பெங்களூருவில் இன்று மோதல்

பெங்களூரு: ஐபிஎல் தொடரில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 30வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-சன் ரைசர்ஸ் ஐதராபாத் மோதுகின்றன. 6 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் ஆர்சிபி கடைசி இடத்தில் உள்ளது. இனி வரும் போட்டிகளில் வென்றால் மட்மே பிளே ஆப் ரேசில் நீடிக்க முடியும்.

மறுபுறம் ஐதராபாத் 5 போட்டியில் 3 வெற்றி, 2 தோல்வி என 6 புள்ளியுடன் 4வது இடத்தில் உள்ளது. கடைசி 2 போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகளை வீழ்த்திய நிலையில் இன்று ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் களம் இறங்குகிறது. இரு அணிகளும் இதுவரை 23 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், சன்ரைசர்ஸ் 12, ஆர்சிபி 10ல் வெற்றி பெற்றுள்ளது.

The post ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் சன்ரைசர்ஸ்; தோல்வியில் இருந்து மீளுமா ஆர்சிபி? பெங்களூருவில் இன்று மோதல் appeared first on Dinakaran.

Tags : Sunrisers ,RCB ,Bengaluru ,IPL ,Royal Challengers ,Bangalore ,Hyderabad ,Chinnaswamy Stadium, Bengaluru ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள்...