- பன்ஹமுகா
- அமிர்கடேஸ்வரர் கோயில்
- திருக்கடையூர், மயிலாடுதுர மாவட்டம்
- மயிலாடுதுறை
- திருக்கடையூர்
- மயிலாடுதுறை மாவட்டம்
- விநாயகர்
- அமிர்தகனேஷ்வர்
- அப்ராமி அம்மன்
- முருகன்
- திருவிழா
- திருக்கடையூர் அமிர்கடேஸ்வரர் கோயில்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழாவை ஒட்டி பஞ்சமுக கொடியேற்றம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து விநாயகர், அமிர்தகணேஸ்வரர், அபிராமி அம்மன், முருகன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் 16ம் தேதியும் தேரோட்டம் 21ம் தேதியும் நடைபெறவுள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் முதல் நாள் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் பண்ணீர் மண்டபத்தில் அம்பாளுடன் வெட்டிவேர் பல்லக்கில் அண்ணாமலை எழுந்தருளினார். அதனை தொடர்ந்து மகிழம் மரத்தை 10 முறை வளம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அண்ணாமலையாரையும், அம்மனையும் மகிழ்விக்கும் வகையில் ஒவ்வொரு சுற்றிலும் பூ கொட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அண்ணாமலைக்கு அரோகரா என்ற பக்தி முழக்கங்களுடன் பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் வடக்குப்பேட்டை தண்டு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் சிறப்பம்சமாக நாள் தோறும் கோயிலின் கம்பம் முன் நடனமாடுவர். மேளதாள இசைக்கேற்ப இளைஞர்கள் 300க்கும் மேற்பட்டோர் ஒரே வரிசையில் நின்று கம்பம் முன் நடனமாடி மகிழ்ந்தனர்.
The post மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழாவை ஒட்டி பஞ்சமுக கொடியேற்றம்..!! appeared first on Dinakaran.