×
Saravana Stores

ஈரான் அனுப்பிய 300 டிரோன்களை வழிமறித்து அழித்தது எப்படி?: வலைதளங்களில் வீடியோ படங்களை வெளியிட்டது இஸ்ரேல் ராணுவம்

இஸ்ரேல்: ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள் மூலம் ஈரான் நடத்திய தாக்குதல் முறியடித்த வீடியோ காட்சிகளை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. சீரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதலை ஈரான் நேற்று நள்ளிரவு நடத்தியது. இதை அடுத்து லெபனான் மற்றும் ஈரான் ஆகியவை தங்கள் வான்வழியை மூடின சீரியா, ஜோர்டான் ஆகியவையும் தங்கள் வனப்பகுதியை தயார் நிலையில் வைத்திருந்தன.

ஈரானிலிருந்து 1800 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இஸ்ரேலின் மீது தாக்குதல் நடத்துவதற்காக அனுப்பப்பட்ட ஆளில்லா விமானங்கள் அங்கே சென்று தாக்கியதா என்ற விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும் 99 சதவீத ட்ரோன்கள் அல்லது ஏவுகணைகள் தங்கள் வான்வழியை அடைவதற்கு முன்பே சுட்டு வீழ்த்தபட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரான் ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்படும் வீடியோ படங்களையும் தமது வலைதள பக்கத்தில் அது வெளியிட்டுள்ளது. ஈரான் நடத்திய அதிரடி தாக்குதலில் இருந்து இஸ்ரேலை காக்க அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை உதவி வருகின்றன.

இந்த தாக்குதல் பேரழிவு மற்றும் மிக பெரிய ஆபத்துக்கான தொடக்க எச்சரிக்கை என்று ஐ.நா பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்ரஸ் கவலை தெரிவித்துள்ளார். சுமார் 300 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஈரானால் ஏவப்பட்டதாகவும் ஈரானுக்கு ஆதரவாக சில ஏவுகணைகள் ஈராக் மற்றும் எமனிலிருந்து ஏவப்பட்டதாகவும் இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில் கணக்கு சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும் தங்களை திருப்பி தாக்கினால் தடுக்க முடியாத அளவிற்கு வலுவான தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரான் அறிவித்துள்ளது. ஆனால் எந்த தளங்களிலிருந்து ஈரான் ஏவுகணைகளை ஏவியதோ அவற்றை அழிக்க இஸ்ரேல் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருவதால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

The post ஈரான் அனுப்பிய 300 டிரோன்களை வழிமறித்து அழித்தது எப்படி?: வலைதளங்களில் வீடியோ படங்களை வெளியிட்டது இஸ்ரேல் ராணுவம் appeared first on Dinakaran.

Tags : Iran ,Israel army ,Israel ,army ,Syria ,Dinakaran ,
× RELATED ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்