- தீ தொண்டு நாள் வாரம்
- வெம்பகோட்டை
- எஜயராம்பண்ணை
- வெம்பகோட்டா தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை அலுவலகம்
- நிலைய அதிகாரி
- செந்தூர்பாண்டியன்
ஏழாயிரம்பண்ணை, ஏப்.15: வெம்பக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அலுவலகத்தில் தீ தொண்டு வார விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நிலைய அலுவலர் செந்தூர் பாண்டியன் தலைமை வகித்தார். உயிர் காக்கும் பணியில் 100 ஆண்டுகளுக்கு மேல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை செயல்பட்டு வரும் நிலையில், ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 20 வரை தீ தொண்டு வார விழா நடைபெறுவது வழக்கம்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை விக்டோரியா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் 1994ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க கடுமையாக போராடிய போது கப்பலில் இருந்த வெடிப்பொருள்கள் வெடித்து சிதறியதில், தீயணைப்பு வீரர்கள் 66 பேர் பலியாகினர். அந்த தினத்தைப் போற்றும் வகையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் தீயணைப்புப் படை வீரர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
The post வெம்பக்கோட்டையில் தீ தொண்டு நாள் வார விழா appeared first on Dinakaran.