- புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்
- ராஜபாளையம்
- புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் கொடி
- ஆராதனா
ராஜபாளையம், ஏப்.15: ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் கொடியேற்றும் வைபவம் நேற்று காலை நடைபெற்றது. அம்மனுக்கு இளநீர், பால், பன்னீர், தேன் போன்ற 16 வகை அபிஷேகங்கள், தீப ஆராதனை வழிபாடுகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
முதல் நாள் திருவிழாவை முன்னிட்டு அம்மன் கண்ணாடி சப்பரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 7ம் நாள் திருவிழாவை முன்னிட்டு அம்மன் பூச்சப்பரத்தில் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறும். 10ம் திருவிழா அன்று ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் ரவி ராஜா மற்றும் நிர்வாக அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.
The post புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.