×
Saravana Stores

தமிழ் புத்தாண்டில் பிறந்த 15 குழந்தைகள் வேலூர் அரசு மருத்துவமனையில்

வேலூர், ஏப்.15: தமிழ் புத்தாண்டு பிறப்பான நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி தொடங்கி நேற்றிரவு வரை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 15 குழந்தைகள் பிறந்தன. 60 தமிழ் ஆண்டுகள் வரிசை சுழற்சியில் நேற்று குரோதி ஆண்டு பிறப்பாகும். ஆண்டின் பிறப்பான சித்திரை மாதம் முதல் நாளான நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி தொடங்கி நேற்றிரவு 7 மணி வரை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 12 ஆண் குழந்தைகளும், 3 பெண் குழந்தைகளும் பிறந்தன.

தமிழ் புத்தாண்டில் பிறப்பு கண்ட இக்குழந்தைகளுக்கும், அவர்களை ஈன்ற தாய்மார்களுக்கும் டீன் பாப்பாத்தி, மருத்துவமனை கண்காணிப்பாளர் ரதிதிலகம், துணை முதல்வர் கவுரி, ஆர்எம்ஓ இன்பராஜ், ஏஆர்எம்ஓ ரவிச்சந்திரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் குழந்தை ஈன்ற தாய்மார்களுக்கு பிரசவ சிகிச்சை அளித்த மகப்பேறு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

The post தமிழ் புத்தாண்டில் பிறந்த 15 குழந்தைகள் வேலூர் அரசு மருத்துவமனையில் appeared first on Dinakaran.

Tags : Tamil New Year ,Vellore Government ,Hospital ,Vellore ,Vellore Government Medical College Hospital ,Kurothi ,Government Hospital ,
× RELATED சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடுகள்