- சித்திரை திருவிழா கொடியேற்றம்
- திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயில்
- திருப்புத்தூர்
- சித்ராய் திருவிழா
- திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப்பெருமாள் கோவில்
- முதல் அமைச்சர்
- பெருமாள்
- சித்ரா திருவிழா கொடியேற்றம்
திருப்புத்தூர், ஏப்.15: திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. உற்சவ துவக்க விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை சேனை முதல்வர் பறப்பாடு நடந்தது. நேற்று காலை 8 மணியளவில் பெருமாள் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளல் நடந்தது. பின்னர் பலிபீடத்திற்கு பூஜை நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு கொடியேற்றம் நடந்தது. இரவில் காப்புக் கட்டுதலுடன் உற்சவம் துவங்கியது. உற்சவ பெருமாள் ஸ்ரீதேவி, பூமாதேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தினந்தோறும் இரவு சுவாமி சிம்மம், அனுமார், தங்க கருடசேவை, சேஷ வாகனம், வெள்ளி யானை வாகனம், தங்கதோளுக்கியானில், தங்க குதிரை, அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் புறப்பாடு நடைபெறும்.
6ம் நாளான ஏப்.19ல் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் வைபவம் நடைபெறும். 7ம் நாளான ஏப்.20ல் மாலை சூர்ணாபிஷேகம், தங்க தோளுக்கினியானில் சுவாமி புறப்பாடு நடைபெறும். 9ம் திருநாளான ஏப்.22ல் மாலை திருத்தேருக்கு தலையலங்காரம் கண்டருளல் நடைபெறும்.
The post திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்: ஏப்.23ல் தேரோட்டம் appeared first on Dinakaran.