- புதுக்கூரிச்சி
- பெரம்பலூர்
- Kolagalam
- நல்லேரு பூட்டுதல் விழா
- பட்டலூர்
- புதுகுரிச்சி
- அலத்தூர் தாலுகா புதுகுரிச்சி
- Kolakalam
பாடாலூர், ஏப்.15: பெரம்பலூர் அருகே புதுக்குறிச்சி கிராமத்தில் பாரம்பரிய முறைப்படி நல்லேறு பூட்டும் விழா கோலாகலமாக நேற்று நடைபெற்றது. இதில் விவசாய பெண்கள் பலர் பங்கேற்று விவசாய செழிக்க வழிபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா புதுக்குறிச்சி கிராமத்தில் பாரம்பரிய முறைப்படி நல்லேறு பூட்டும் விழா கோலாகலமாக நேற்று நடைபெற்றது. வசந்த காலத்தின் தொடக்கமான சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கிராம பகுதிகளில் நல்லேறுபூட்டி விவசாய பணிகளை தொடங்குவது வழக்கம்.
புதிதாக பிறந்திருக்கும் தமிழ்ப்புத்தாண்டில் விவசாயம் தழைக்க வேண்டும். ஆடு, மாடுகளுக்கு தீவனம் கிடைக்க வேண்டும். உணவு பொருள் உற்பத்தி அதிகரித்து பசி, பட்டினி இல்லாமல் வாழவேண்டும் என்பதற்காகவே இந்த நல்லேறு பூட்டும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.பருவமழை எப்போது பெய்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் சித்திரை 1-ம்தேதி விவசாயிகள் ஏர் பூட்டி விவசாய வேலைகளை தொடங்குவது நடைமுறையாக உள்ளது. அதன்படி புதுக்குறிச்சி கிராமத்தில் நல்லேறு பூட்டும் விழா நடைபெற்றது.
அப்போது நல்லேறு பூட்டும் வயலில் திரளான பெண்கள் தேங்காய், வாழைப்பழம் போன்ற அபிஷேக பொருட்களால் விவசாய செழிக்க வழிபட்டனர். தொடர்ந்து கொளுத்தும் வெயிலையும் பொறுப்படுத்தாமல் விவசாயிகள் டிராக்டர்கள் மூலம் நிலங்களை உழுதனர். இந்த பழமை மாறாமல் நடைபெறும் விழாவில் விவசாயிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை புதுக்குறிச்சி கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.
The post பெரம்பலூர் அருகே புதுக்குறிச்சி கிராமத்தில் நல்லேறு பூட்டும் விழா கோலாகலம் டிராக்டரில் உழவு செய்து வழிபட்ட விவசாயிகள் appeared first on Dinakaran.