பெரம்பலூர், ஏப்.15: பெரம்பலூரில் அம்பேத்கர் 133-வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு திமுக கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட பல் வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துக் கொடுத்த அண்ணல் அம்பேத்கரின் 133-வது பிறந்த நாளையொட்டி பெரம்பலூர் பழைய பஸ்டாண்டு நுழைவு வாயில் அருகே உள்ள அம்பேத்கரின் உருவ சிலைக்கு நேற்று (14ம் தேதி) காலை இந்தியா கூட்டணியின் சார்பாக திமுக கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பிரபாகரன், மாவட்ட ஊராட்சிதலைவர் குன்னம் ராஜேந்திரன், மாநிலநிர்வாகி துரைசாமி, தலைமை செயற்குழு உறு ப்பினர் ராஜேந்திரன், பொருளாளர் ரவிச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், சன்.சம்பத், நூருல்ஹிதா இஸ்மாயில், பொதுக்குழு உறுப்பினர்கள் முகுந்தன், ஜெகதீஸ் வரன், ஒன்றியச் செயலா ளர்கள் ராஜ்குமார், நல்ல தம்பி, மதியழகன், மருவத்தூர் ராஜேந்திரன், டாக்டர் வல்லபன், மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் ஹரி பாஸ்கர், நகர துணைச் செயலாளர் சபியுல்லா உள்ளிட்ட திமுகவினர் மற் றும், மதிமுக மாவட்ட செயலாளர் ஜெயசீலன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச்செயலா ளர் ரத்தினவேல், நகரச் செயலாளர் தங்க சண்முக சுந்தரம், இந்திய தொழிலாளர் கட்சித் தலைவர் ஈஸ்வ ரன் உள்ளிட்ட 50க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.
மார்கசிஸ்ட் கம்யூ. கட்சி சார்பாக மாவட்டச் செயலாளர் ரமேஷ் தலைமையில், மாவட்ட செயற்குழுவைச் சேர்ந்த செல்லதுரை, அகஸ்டின், ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் ரெங்கராஜ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர். திராவிடர் கழகம் சார்பாக மாவட்டத் தலை வர் தங்கராசு தலைமையி லும், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் தலைமையிலும், பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பாக மாநிலச்செயலாளர் காமராஜ் தலைமையிலும், பாஜ சார் பாக மாவட்டதலைவர் செல் வராஜ் தலைமையிலும், அரசு ஊழியர் ஐக்கிய பேர வை சார்பாக மாவட்ட செய லாளர் செந்தில்குமார் தலைமையிலும் அம்பேத்கர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
The post பெரம்பலூரில் அம்பேத்கர் சிலைக்கு திமுக கூட்டணி கட்சியினர் மாலை அணிவிப்பு appeared first on Dinakaran.