தர்மபுரி, ஏப்.15: தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி, தர்மபுரியில் சாலை விநாயகர் கோயிலில் நேற்று அதிகாலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் சுவாமிக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டது.
இதில், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில், சிறப்பு து சுவாமிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு, பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. திரளானோர் கலந்து கொண்டு வழிபட்டனர். தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூன சுவாமி கோயில், பரவாசுதேவ சுவாமி கோயில், அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், நெசவாளர் நகர் ஓம்சக்தி மாரியம்மன், மகாலிங்கேஸ்வரர் கோயில், வேல்முருகன் கோயில், கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில், அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோயில், சவுலுப்பட்டி ஆதிலிங்கேஸ்வரர் கோயில், மதிகோண்பாளையம் மாரியம்மன் கோயில், எஸ்வி ரோடு அபய ஆஞ்சநேயர் சுவாமி கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.குமாரசாமிப்பேட்டை அங்காளபரமேஸ்வரி கோயிலில், தங்க கவசத்தில் அம்மன் அருள்பாலித்தார். தொடர்ந்து அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது.
அனைவருக்த்கும் கூழ் வழங்கப்பட்டது. செல்லியம்மன் கோயில் மற்றும் உழவர் தெரு மாரியம்மன் கோயில், செல்வகணபதி கோயில், விநாயகர் கோயில், உழவர் சந்தை எதிரே உள்ள மாரியம்மன் கோயில், எஸ்வி ரோடு பூவோடு பூவாடைக்காரி அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயில், பி.அக்ரகாரம் முனியப்பசாமி கோயில், வே.முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோயில், தொப்பூர் மன்றோ குளக்கரை ஆஞ்சநேயர் கோயில், மொரப்பூர் சிங்காரத்தோப்பு முனியப்பன் கோயில், பாலக்கோடு புதூர் மாரியம்மன் கோயில், காரிமங்கலம் மலையில் உள்ள அருணேஸ்வரர் கோயில், ஒகேனக்கல் தேச நாதேஸ்வரர் கோயில், மூக்கனூர் ஆதிமூல பெருமாள் கோயில், மணியம்பாடி வெங்கட்ரமண சாமி கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும், தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
காரிமங்கலம்: காரிமங்கலம் வாணியர் தெரு அம்பிகேஸ்வரி அம்மன் கோயிலில், பால்குடம் எடுத்தல், மகா அபிஷேகம், அலங்காரம் நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி திருக்கல்யாண உற்சவம், இரவு திருவீதி உலா நடந்தது. இதேபோல், அஷ்ட வாராஹி அம்மன் கோயில், மந்தை வீதி மகா சக்தி மாரியம்மன் கோயில், வெள்ளையன் கொட்டாவூர் மாரியம்மன் கோயில், ஏரிக்கரை ஆஞ்சநேயர் கோயில், கெரகோட அள்ளி ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடந்த சிறப்பு பூஜையில் திரளானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
The post கோயில்களில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.