×

அரசியலெல்லாம் எனக்குத் தெரியாது: பாஜ வேட்பாளருக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகை ஷோபனா சொல்கிறார்

திருவனந்தபுரம்: ‘நான் ஒரு நடிகை மட்டும்தான். அரசியல் எல்லாம் எனக்குத் தெரியாது’ என்று திருவனந்தபுரம் தொகுதி பாஜ வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த நடிகை ஷோபனா கூறினார்.
சில மாதங்களுக்கு முன் திருச்சூரில் பிரதமர் மோடி கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் பிரபல நடிகை ஷோபனாவும் பங்கேற்றார். அப்போதே அவர் பாஜவில் சேரப் போவதாக கூறப்பட்டது. மேலும் கேரளாவில் அவர் பாஜ சார்பில் போட்டியிடப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று நடிகை ஷோபனா திருவனந்தபுரம் தொகுதி பாஜ வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார். நெய்யாற்றின்கரையில் நடந்த ரோடு ஷோவிலும் அவர் பங்கேற்றார். இன்று திருவனந்தபுரம் அருகே உள்ள காட்டாக்கடையில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ள உள்ளார்.

இந்நிலையில் நேற்று அவர் திருவனந்தபுரத்தில் பேட்டியளித்த போது அரசியலில் சேரப் போகிறீர்களா என நிருபர்கள் கேட்டனர். அதற்கு நடிகை ஷோபனா, ‘‘நான் ஒரு நடிகை மட்டும் தான். அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. மலையாளம் சரிவர பேசவும் வராது. மலையாளத்தில் பேசப் படித்த பின்னர் அரசியல் பற்றி கூறுகிறேன்’’ என்றார்.

The post அரசியலெல்லாம் எனக்குத் தெரியாது: பாஜ வேட்பாளருக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகை ஷோபனா சொல்கிறார் appeared first on Dinakaran.

Tags : Shobana ,BJP ,Thiruvananthapuram ,Modi ,Thrissur ,
× RELATED சசி தரூர் மீது போலீஸ் வழக்கு